துபாயில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜிக்கு சிறப்பான வரவேற்பு
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கி வரும் துபாய்க்கு 16.04.2009 வியாழக்கிழமை இரவு திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி முதுகுளத்தூர் மவ்லவி முஃப்தீ க. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்களுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், துணைப்பொதுச்செயலாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ், திருச்சி உறையூர் பகுதி ஜமாஅத்தார்கள் ஜாபர் சித்தீக், ஹமீது மற்றும் சகோதரர்கள், புதுக்கோட்டை ஷர்புதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இரவில் வந்திறங்கிய அவர் துபாயில் இரவே பகல் போல் காட்சியளிப்பதாக குறிப்பிட்டார்.