Saturday, November 10, 2007

துபாயில் பெண்களுக்கான சிறப்பு உணர்வாய் உன்னை நிகழ்ச்சி

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்

http://tmpolitics.blogspot.com/2007/11/urgent-urgent.html
www.tamilmuslimmedia.com

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்

B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.

இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.




சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007


வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்!!

Thursday, October 25, 2007

மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி




மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

நாள் : 13.10.2007 சனிக்கிழமை காலை 10.00 மணி
இடம் : மம்சார் பூங்கா

தலைமை : N.S.A. நிஜாமுதீன் ( தலைவர் )

கிராஅத் : இமாம்

வரவேற்புரை : M. காஜா நஜுமுதீன்

முன்னிலை : A.H. ஜாஹிர் ஹ¤சைன்

துவக்கவுரை : S. சம்சுதீன் ( துணைத்தலைவர் )

www.mudukulathur.com
இணையத்தளம் துவக்கி வைத்து சிறப்புரை
H. ஹஸன் அஹமது ( கெளரவ தலைவர் )

சிறப்பு விருந்தினர் உரை : ஆவூர் மெளலவி இஸ்மாயில் ஹஸனி

தணிக்கையாளர் அறிக்கை : H. அமீர் சுல்தான் ( ஆடிட்டர் )

ஆண்டறிக்கை : K. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்
( பொதுச் செயலாளர் )

எதிர்கால திட்டம் : H. இப்னு சிக்கந்தர் (ஒருங்கிணைப்பாளர் )

வாழ்த்துரை : முஹம்மது அலி, ஷார்ஜா
S. அமீனுதீன், அபுதாபி

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உரை

A. ஜஹாங்கீர் ( அஜ்மான் ) A. சிக்கந்தர் ஹ¤சைன் ( தேரா ) N. ஜெஹபர் சாதிக் ( தேரா ) S.N.பக்ருதீன் (தேரா) M. ஹபிப் திவான் ( தேரா ) A. அஹமது இஸ்மத்துல்லா ( தேரா )
M. ஜாஹிர் ஹ¤சைன் ( RAK ) A. முஹம்மது தாஹா ( அல் கூஸ் )
S. முஹம்மது ரஸ்வி ( ஷார்ஜா )

நன்றியுரை : A. அஹமது இம்தாதுல்லாஹ் (பொருளாளர்)

துஆ

Saturday, October 20, 2007

Greetings from Habeeb

From: habeeb ali [mailto:deccanenterprises@gmail.com]
Sent: Wednesday, October 17, 2007 11:19 AM
To: muduvai@googlegroups.com
Cc: Imdadullah Ahmed
Subject: Greetings



Assalamu Alaikum (Wa Rah...... Wa Bar....)



It gives me immersed happy to know that a web is available exclusively run

for the citizens of Mudukulathur.

I am getting all the day to day news and informations of our native

peoples throughout the word.

I congratulate for the initiatives taken for this very purpose.



Habeeb Ali

Deccan Enterprises

Gulbarga 585 104

Karnataka.

94480 39159

unitedmudukulathurmuslimjamath

unitedmudukulathurmuslimjamath

united mudukulathur muslim jamath

unitedmudukulathurmuslimjamath

Tuesday, October 16, 2007

Wednesday, October 3, 2007

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பினை ஏற்படுத்தி தங்களது ஊரில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் நிர்வாகக்குழுக்கூட்டம் துபாயில் ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துவக்கமாக பொதுச்செயலாளர் அல்ஹாஜ் சம்சுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு : கெளரவ தலைமை ஆலோசகராக ஹெச்.ஹஸன் அஹமது , தலைவராக மெளலவி என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் , துணைத்தலைவராக அல்ஹாஜ் சம்சுதீன் , பொதுச்செயலாளராக கே. முஹம்மது ஹிதாயத்துல்லா, பொருளாளராக ஏ.அஹமது இம்தாதுல்லா சேட், ஆடிட்டராக ஹெச். அமீர் சுல்தான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக ஹெச்.இப்னு சிக்கந்தர் ( தேரா ) , ஏ.முஹம்மது தாஹா ( அல் கூஸ் ) , ஏ. ஜஹாங்கீர் ( அஜ்மான் ), முஹம்மது ரிஸ்வி ( ஷார்ஜா ), ஏ.அஹமது இஸ்மத்துல்லாஹ் சேட் ( சோனாப்பூர் ) , ஜாஹிர் உசேன் ( ராசல் கைமா ) மற்றும் எஸ்.அமீனுதீன் , கஸ்ஸாலி ( அபுதாபி ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கெளரவிப்பது எனவும் , இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் தாயகப் பிரதிநிதிகள் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் , மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் , மெளலவி ஏ உமர் ஜஹ்பர் ஆலிம், ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

www.mudukulathur.com என்ற இணையத்தளத்தை ஏற்படுத்துவது, மின்னஞ்சலில் உலகெங்கும் உள்ள முதுகுளத்தூர் மக்களை muduvai@googlegroups.com ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்புக்கு 050 5196433 எனும் அலைபேசியிலோ அல்லது muduvaihidayath@gmail.com எனும் மின்னஞசல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.