Thursday, July 30, 2009

வெட்கம் ஈமானை உறுதிப்படுத்தும்!

வெட்கம் ஈமானை உறுதிப்படுத்தும்!

வெட்கம் என்பது ஈமானை உறுதிப்படுத்தும் – அல்ஹதீஸ்

ஈமானோடு – சீமான்தனத்தோடு வாழு என்பது முஸ்லிம்கள் பலரால் கூறப்படும் வாழ்த்துச் செய்தி. பெரியவர்களிடம் சிறியவர்கள் ஈமானுக்காக துஆச் செய்யுங்கள் எனக் கூறுவதும் உண்டு. ஈமான் என்பதற்கு இறைவன் உள்ளான். அவன் ஒருவனே, அவன் இணையற்றோன். அவன் தேவையில்லாதவன், அவன் நித்திய ஜீவனானவன். மனிதர்களை நல்வழிப்படுத்த தனது தூதர்களை அவன் அனுப்பியுள்ளான். அமரர்கள் வேதங்கள் அவனால் படைக்கப்பட்டவை. நன்மையும் தீமையும் அவனைக் கொண்டே ஏற்படுகின்றன என்பதோடு இஸ்லாத்தின் ஐந்து தூண்களான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவையாவும் கடமை என நம்புவது மட்டும்தான் ஈமான் என்பது பலரின் கருத்து.

மேற்கண்ட நபிமொழிப்படி ஈமான் என்பது கடல் போன்றது. மிகப்பல கிளைகளைக் கொண்டது. எடுத்துக் காட்டாக பிறரை நாவாலும், கையாலும், துன்புறுத்தாமை, தான் விரும்புவதையே தன் சகோதரனுக்குக் கொடுப்பது, ரஸுல் (ஸல்) அவர்களை உளமார நேசிப்பது, அன்சாரி களிடம் அன்பு காட்டுவது, குழப்பங்களைத் தவிர்ப்பது, ஸலாமை, சமாதானத்தைப் பரப்புவது, கணவனிடம் நன்றியோடு நடந்து கொள்வது, இரு சாராரைச் சச்சரவி லிருந்து மீட்டு சமரசம் செய்து வைப்பது, அறப்போர் புரிவது, நிலைத்து நிற்கும் நல்லறங்கள் செய்வது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, பொது மக்களுக்கு நன்மை தரும் நற்செயல்களைப் புரிவதில் ஊக்கம் காட்டுவது போன்ற எல்லாமே ஈமான் என்பதாகக் கருதப்படும். இறைவனுக்கு மாறுபட்டு நடப்பதும், இறைவனுக்கு இணை வைத்தலும், கணவனுக்கு துரோகம் செய்தலும், விபச்சாரத்தில் ஈடுபடுதலும், பாவமான காரியங்களில் முனைப்பு காட்டுவதும், போதை தரும் பொருட்களை உட்கொள்வதும், அக்கிரமம் செய்தலும், நயவஞ்சகமும், அன்னிய ஆடவர் முன்னிலையில் சகஜமாக நடமாடுவதும், கோள், பொய், புரளி பேசுவதில் மகிழ்ச்சி கொள்வதும், பிறரைப் பரிகசிப்பதும், வெட்கப்பட வேண்டிய செயல்களாகும். இவைகளைச் செய்வதில் நாணமுற்று யார் தவிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் ஈமானில் உறுதி பூண்டவர்களாவர்!

பேராசிரியை. ஹாஜியா. கே. கமருன்னிஸா அப்துல்லாஹ்

Monday, July 27, 2009

ரமளானின் மூன்று பகுதிகள்

ரமளானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையாகவும்
நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும்
கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.



அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னுகுஜைமா பாகம் 3 எண் 191

முதலாவது பத்து நாட்களில்

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்

இரண்டாவது பத்தில்

முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

மூன்றாவது பத்து நாட்கள்

நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும்

"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள்." (அல் குர்ஆன் 66 : 6)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு போPத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.


ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் து}தரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்"" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்" இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!

Saturday, July 25, 2009

அல்குர்ஆனின் மாதம்

அல்குர்ஆனின் மாதம்


முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான்.

இது நோன்பின் மாதமாகும்,

இது அல்குர்ஆனின் மாதமாகும்,

இது பொறுமையின் மாதமாகும்,

இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,

இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,

இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: 'எண்ண முடியுமான சில நாட்களாகும்' (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை
மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்,
நரகத்திற்குரியவர்கள் விடுதலை,
பாவங்களுக்கு பரிகாரம், நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு,
நன்மையில் நிறைவான மாதம்...

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு,நோன்பு பரிந்து பேசும்,
நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை,
கணக்கின்றி கூலி வழங்கப்படும்,நோன்பின் கூலி சுவர்க்கம்,நரகத்தை விட்டு பாதுகாப்பு,
மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்,
நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி,கஸ்தூரியை விட சிறந்த வாடை,
நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு...

நோன்பாளி செய்யவேண்டியவைகள்

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்,
அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்
ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
தான தர்மம் செய்தல் ,,அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்

Friday, July 24, 2009

த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோவில் ம‌வ்ல‌வி உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் சொற்பொழிவுக‌ள்

த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோவில் ம‌வ்ல‌வி உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் சொற்பொழிவுக‌ள்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்தின் த‌லைவர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஃபாஜில் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ மார்ச் மாத‌ம் அமீரக‌ம் வ‌ருகை புரிந்தார்.
அப்பொழுது அவ‌ர் ம‌லேசியா வானொலிக‌ளில் ப‌ங்கேற்று ஒலிப‌ர‌ப்பான‌ 'இஸ்லாமிய‌க் குடும்ப‌ம்' எனும் நிக‌ழ்ச்சிக‌ளின் கேஸ‌ட்டுக‌ளைக் கொண்டு வ‌ந்தார்.
அத‌னை கேஸ‌ட்டுக‌ளில் இருந்து எம்பி3 க்கு மாற்றி த‌ற்பொழுது உல‌க‌ ம‌க்க‌ள் பார்க்கும் கேட்டு ப‌ய‌ன்பெறும் வ‌ண்ண‌ம்

http://www.tamilislamicaudio.com/


http://www.tamilislamicaudio.com/audioall.asp?lang=ln1


எனும் இணைய‌த்த‌ள‌த்தில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
இப்ப‌ணிக்காக‌ துபாய் டிவியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் நெல்லை ஏர்வாடி ச‌கோத‌ர‌ர் பீர் முஹ‌ம்ம‌து ந‌ம‌து ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் மூல‌ம் ந‌ன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




1. ரமளானில் மலேசியா வானொலியில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி


2. ரமளானில் மலேசியா வானொலியில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.

3. பிள்ளை வளர்ப்பு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு.

4. நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியா வானொலி‍‍‍‍‍-6ல் ந‌டைபெற்ற‌ சிற‌ப்புக் க‌விய‌ர‌ங்க‌ம். க‌விஞ‌ர்க‌ள்: க‌.மு.அன்வ‌ர் (த‌லைமை), ஹாஜி உம‌ர் ஜாஃப‌ர், மைதீன் சுல்தான், தென்ற‌ல் கவிஞ‌ர் அலாவுத்தீன்

5.மலேசியா வானொலியில் ந‌டைபெற்ற‌ இஸ்லாமிய‌ புத்தாண்டின் சிற‌ப்புக் க‌விய‌ர‌ங்க‌ம். க‌விஞ‌ர்க‌ள்: க‌.மு.அன்வ‌ர் (த‌லைமை), ஹாஜி உம‌ர் ஜாஃப‌ர், ஹாஜி உ.க.அப்துல் ர‌ஹ்மான், மைதீன் சுல்தான்.


and more