முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
www.mudukulathur.com
www.muduvaivision.com
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 26 டிசம்பர் 2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் துஆ ஓதி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ஏ.ஷாஜஹான், சென்னை அல் ஹரமைன் அறக்கட்டளை தலைவர் முஹம்மது ரபீக் ஹாஜியார், பொறியாளர்கள் ருக்னுதீன்,தேரிருவேலி காஜா நஜுமுதீன், பனைக்குளம் ஜாஹிர் ஹுசைன் குடும்பத்தினர். திடல் ஜமாஅத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் உமர் ஜஃபர் மன்பயீ, திடல் முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால் நாசர், பெரியபள்ளிவாசல் முன்னாள் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான எம்.அன்வர், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்குட்பட்ட இவ்விடத்தில் இப்புதிய பள்ளிவாசல் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அல் ஹரமைன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பள்ளி கட்டப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாவர். இவர்களது குழந்தைகள் மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வதற்கும் இப்பள்ளிவாசல் உதவியாக இருக்கும்.
Friday, December 26, 2008
Thursday, December 25, 2008
Wednesday, September 17, 2008
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி
Saturday, September 13, 2008
அஜ்மானில் முஸ்லிம் லீக் மணி விழா மாநாடு மலர் அறிமுக நிகழ்ச்சி
அஜ்மானில் முஸ்லிம் லீக் மணி விழா மாநாடு மலர் அறிமுக நிகழ்ச்சி
அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டு மலர் அறிமுக நிகழ்ச்சி மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், பொருளாளர் அஹமத் இம்தாதுல்லாஹ், ஒருங்கிணைப்பாளர் இப்னு சிக்கந்தர், என். காஜா நஜுமுதீன், ஏ. ஜஹாங்கீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tuesday, August 19, 2008
Thursday, May 8, 2008
ஷார்ஜாவில் தேரிருவேலி ஜமாஅத் உதயம்
ஷார்ஜாவில் தேரிருவேலி ஜமாஅத் உதயம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகராம் ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள தேரிருவேலியைச் சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து ஐக்கிய அரபு அமீரக தேரிருவேலி ஜமாஅத் ஒன்றினை ஏற்படுத்தினர்.
தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்ப்யீ அவர்களது ஆலோசனையின் பேரில் தேரிருவேலி ஜமாஅத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும் வரை மௌலவி அலி பாதுஷா மன்பயீ அவர்கள் ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
மௌலவி சாதிக் மன்பயீ அவர்கள் ஹஜ்ரத் பஷீர் சேட் ஆலிம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மௌலவி பஷீர் சேட் ஆலிம் தனது ஏற்புரையில் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் அமீரகத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போன்று தேரிருவேலி ஜமாஅத்தினரும் சமுதாயப் பணிகளில் ஈடுபட முனைந்திருப்பதைப் பாராட்டினார். முதுகுளத்தூர் சமுதாய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அளிப்பதைப்போன்று இன்று மாவட்டம் முழுவதும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதுகுளத்தூர் மற்றும் தேரிருவேலி ஜமாஅத்தினர் இத்தகைய பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஊருக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள பல பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் முதுகுளத்தூர் ஜமாஅத் மேற்கொண்டுவரும் சமுதாயப்பணிகளை எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் முஹம்மது அலி, ஹபிப் திவான், ஏ. அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் உள்ளிட்ட தேரிருவேலி மற்றும் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் கலந்து கொண்டனர். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
www.muduvaibasheersaitalim.blogspot.com

Tuesday, April 22, 2008
துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது
துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது
துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.
'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.
மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.
பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி
Saturday, April 19, 2008
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு:
ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888
நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Friday, April 18, 2008
Wednesday, April 9, 2008
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நிகழ்ச்சியில்
Tuesday, April 8, 2008
அபுதாபி ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிகழ்வு
துபாய் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை நிகழ்ச்சியில்....
துபாய் அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் சார்பில் கவிஞர் அபிவை தாஜுதீனுக்கு பாராட்டு விழா ஏப்ரல் 05 அன்று கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
இதில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் வாழ்த்துரை நிகழ்த்தினார்.
நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் பாடிய பல பாடல்களை எழுதியவர் கவிஞர் அபிவை தாஜுதீன் ஆவார்.
விரிவான செய்திகள் விரைவில்
Wednesday, April 2, 2008
துபாய் கல்விக் கண்காட்சியில் முதுவை மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானின் ஏ.ஜே அறக்கட்டளை பங்கேற்பு
துபாய் கல்விக் கண்காட்சியில் முதுவை மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானின் ஏ.ஜே அறக்கட்டளை பங்கேற்பு
மௌலவி பஷீர் சேட் - ஐக்கிய ஜமாத்தினர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்
துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி, ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.
Labels:
கண்காட்சி,
கல்வி,
டாக்டர் அமீர்ஜஹான்,
துபாய்,
முதுகுளத்தூர்
Sunday, March 30, 2008
கவானிஜ் மதரஸாவில் பாம்பன் மௌலவி முஹம்மது அப்பாஸ் அவர்களுடன் சந்திப்பு
துபாய் கவானிஜ் பகுதியில் ஹிப்ஸ் மதரஸா நடத்தி வரும் பாம்பன் மௌலவி முஹம்மது அப்பாஸ் அவர்களுடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமையில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், பொருளாளர் ஏ.அஹமத் இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ஏ. சிக்கந்தர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மௌலவி பஷீர் சேட் அவர்கள் துபாயில் இது போன்று ஒரு மதரஸா இருப்பது குறித்து மிகவும் பெருமிதம் கொண்டார். அதனை தமிழகத்தைச் சேர்நத ஆலிம் பெருந்தகை நிர்வகித்து வருவது குறித்து மிக்க மகிழ்வடைந்தார்.
மதரஸாவில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
Saturday, March 29, 2008
ஷார்ஜாவில் மௌலவி பஷீர் சேட் அவர்களுக்கு வரவேற்பு
ஷார்ஜாவில் மௌலவி பஷீர் சேட் அவர்களுக்கு வரவேற்பு
ஷார்ஜாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத்திற்கு 28.03.2008 வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் ஆர்.எஸ்.மங்கலம் மௌலவி யூசுஃப் ஆலிம், மௌலவி சாதிக், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத்,பொருளாளர் அஹமது இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் இஸ்மத்துல்லாஹ், முஹம்மது ஃபாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Friday, March 28, 2008
மௌலவி பஷீர் சேட் HRM கேம்பில் ஜும்ஆ உரை
மௌலவி பஷீர் சேட் HRM கேம்பில் ஜும்ஆ உரை
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் சோனாப்பூர் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். தொழிலாளர் முகாமில் ஜும்ஆ பிரசங்கம் நடத்தினார்.
அவர் தனது உரையில் ஹிஜ்ரத் செய்வதனால் பரக்கத் உண்டாகிறது என்றார். மேலும் குடும்பத்தினரைப் பிரிந்து ஹிஜ்ரத் செய்து உழைக்க வத்திருப்பதிலும் பரக்கத் இருப்பதாக குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜும்ஆ உரைக்குப்பின்னர் தொழுகை நடத்தினார். ஹெச்.ஆர்.எம்.கேம்ப் வருகை புரிந்த ஹஜ்ரத் அவர்களை மௌலவி யூசுஃப் ஆலிம் - ஆர்.எஸ்.மங்கலம் வரவேற்றார்.
அவருடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் ஏ.அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், உறுப்பினர்கள் ஷபிகுர் ரஹ்மான், அதிகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Subscribe to:
Posts (Atom)