Sunday, March 30, 2008

கவானிஜ் மதரஸாவில் பாம்பன் மௌலவி முஹம்மது அப்பாஸ் அவர்களுடன் சந்திப்பு




துபாய் கவானிஜ் பகுதியில் ஹிப்ஸ் மதரஸா நடத்தி வரும் பாம்பன் மௌலவி முஹம்மது அப்பாஸ் அவர்களுடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமையில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், பொருளாளர் ஏ.அஹமத் இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ஏ. சிக்கந்தர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மௌலவி பஷீர் சேட் அவர்கள் துபாயில் இது போன்று ஒரு மதரஸா இருப்பது குறித்து மிகவும் பெருமிதம் கொண்டார். அதனை தமிழகத்தைச் சேர்நத ஆலிம் பெருந்தகை நிர்வகித்து வருவது குறித்து மிக்க மகிழ்வடைந்தார்.

மதரஸாவில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


Saturday, March 29, 2008

ஷார்ஜாவில் மௌலவி பஷீர் சேட் அவர்களுக்கு வரவேற்பு



ஷார்ஜாவில் மௌலவி பஷீர் சேட் அவர்களுக்கு வரவேற்பு

ஷார்ஜாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத்திற்கு 28.03.2008 வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஆர்.எஸ்.மங்கலம் மௌலவி யூசுஃப் ஆலிம், மௌலவி சாதிக், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத்,பொருளாளர் அஹமது இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் இஸ்மத்துல்லாஹ், முஹம்மது ஃபாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Friday, March 28, 2008

மௌலவி பஷீர் சேட் HRM கேம்பில் ஜும்ஆ உரை

மௌலவி பஷீர் சேட் HRM கேம்பில் ஜும்ஆ உரை




முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் சோனாப்பூர் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். தொழிலாளர் முகாமில் ஜும்ஆ பிரசங்கம் நடத்தினார்.

அவர் தனது உரையில் ஹிஜ்ரத் செய்வதனால் பரக்கத் உண்டாகிறது என்றார். மேலும் குடும்பத்தினரைப் பிரிந்து ஹிஜ்ரத் செய்து உழைக்க வத்திருப்பதிலும் பரக்கத் இருப்பதாக குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜும்ஆ உரைக்குப்பின்னர் தொழுகை நடத்தினார். ஹெச்.ஆர்.எம்.கேம்ப் வருகை புரிந்த ஹஜ்ரத் அவர்களை மௌலவி யூசுஃப் ஆலிம் - ஆர்.எஸ்.மங்கலம் வரவேற்றார்.

அவருடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் ஏ.அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், உறுப்பினர்கள் ஷபிகுர் ரஹ்மான், அதிகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







www.mudukulathur.com

மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் துபாய் வருகை



for further news

www.mudukulathur.com

Saturday, March 22, 2008

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பரிசளிப்பு விழா



முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆதரவுடன் முதுகுளத்தூரில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 22.03.2008 சனிக்கிழமை மாலை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமை தாங்கினார். அமீரகப் பிரதிநிதி எம். பக்ருதீன் பாதுஷா முன்னிலை வகித்தார். திடல் பள்ளிவாசல் இமாம் எஸ். முஹம்மது ரபியுத்தீன் ஃபைஜி பாஜில் மன்பஈ இறைவசனங்களை ஓதினார்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாணாக்கர்கள் பி. பாவா பக்ருதீன், என். நஜிமா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மார்க்க போதனைத் தேர்வில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.

குர் ஆன் ஓதும் போட்டியில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் வாழ்த்துரை வழங்கினார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்க்கு பரிசுகளை அரசு மருத்துவர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது மைதீன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை பெரிய பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.எம்.கே.எம். காதர் முகையதீன், பெரிய பள்ளிவாசல் உதவி இமாம் மௌலவி எஸ்.டி.ஷேக் முகைஅதீன் மன்பஈ, திடல் பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.ஜஹ்பர் சாதிக் அலி, ஆசிரியர் ஏ. ஹபிப் முஹம்மது உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

உதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் : முதுவை ஹிதாயத்