துபாயில் பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு மற்றும் நூல் வெளியீடு
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமை தாங்கினார். துணைப்பொதுச்செயலாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து துவக்கவுரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்கை சீ பிரைட் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர் பொருளாதார மேம்பாடு காணுவதற்கான வழிமுறைகள் குறித்து விவரித்தார். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமிய பைத்துல்மால் எனும் நிதியம் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளைப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எஸ்.ஆபிதீன் அவர்கள் எழுதிய ஆதாம் பாலமா ? ராமர் பாலமா ? எனும் நூலை செய்யது எம். அப்துல் காதர் வெளியிட முதல் பிரதியை ஹெச். இப்னு சிக்கந்தர் பெற்றுக்கொண்டார்.
பொருளாளர் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் எம். காஜா நஜுமுத்தீன், ஹபீப் திவான், வரிசை முஹம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.