முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய மாணவி பிளஸ் டூ தேர்வில் முதல் இடம்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் இஸ்லாமிய பயிற்சி மைய மாணவி கே. அஜிபா நஸ்ரின் பாத்திமா த/ பெ. எஸ். காஜா முகைதீன் ( ஆசிரியர் ) பிளஸ் டூ தேர்வில் 1200 க்கு 1153 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளார்.
மேலும் பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் கல்வி மாவட்டத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ளார். ( விரிவான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் )
நமது பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தேர்வு எழுதியவர்கள் 264
தேர்ச்சி பெற்றவர்கள் 240
மூன்றாவது குரூப் வரலாற்று பாடத்தில் அதிகமானோர் தோல்வியடைந்ததே இதற்குக் காரணம் என தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் தொலைபேசியில் தெரிவித்தார்.
நமது இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பயின்று வரும் ஐந்து மாணவ,மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதிப்பெண் மற்றும் பிற விபரங்கள் விரைவில் மின்னஞ்சல் வழியே இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் வழங்குவார்.
முதன் முறையாக நமது பயிற்சி மையத்திலிருந்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி கே. அஜிபா நஸ்ரின் பாத்திமாவுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.
நமது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள்
முதல் மதிப்பெண்:
மு. அஜிபா நஸ்ரின் பாத்திமா:
1153/1200 ( FIRST GROUP )
இரண்டாம் மதிப்பெண்:
பு. லெட்சுமி :
1124/1200 (FOURTH GROUP)
மூன்றாம் மதிப்பெண்:
மு. பாலமுருகன்
1078/1200 (FIRST GROUP)
இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு :
அஜிபா நஸ்ரின் பாத்திமா.K - 1153
முஹம்மது இபுராஹிம்.B - 1043
அஸ்பக் அஹமது.J - 1034
அகமது அமீன் அலியார்.G - 1016
ஹபிலத்துன் நிஸா.H - 904