Saturday, January 23, 2010

கமுதி காலவிருத்தி பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

கமுதி காலவிருத்தி பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா
கமுதி,​​ ஜன.​ 22:​ ​ கமுதியில் பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத்தார் நிóர்வாகத்தில் உள்ள கலா விருத்தி துவக்கப் பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா,​​ விழா நினைவு புதிய கட்டடத் திறப்பு விழா,​​ கலாவிருத்தி மேனிலைப்பள்ளி துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை ​(ஜனவரி 24) நடைபெறுகிறது.
​ ​ ​ ​ ​ ​ துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக் குழு உறுப்பினர் எச்.​ அப்பாஸ் தலைமை வகிக்கிறார்.​ சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச் சபை நிர்வாகிகள்
கமுதி ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
​ ​ ​ ​ ​ பள்ளி தாளாளர் கே.பி.எம்.​ முகம்மது அலி ஜின்னா வரவேற்கிறார்.​ ​
​ ​ ​ ​ மாலை 4.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு கமுதி-சென்னை முஸ்லிம் பொது நலச் சபை தலைவர்,​​ வழக்கறிஞர் எஸ்.ஏ.அக்பர் தலைமை வகிக்கிறார்.
​ ​ ​ ​ ​ விழாவில் ரயில்வே இணை அமைச்சர் இ.​ அகம்மது,​​ எம்.பி.கள் ஜே.கே.​ ரித்தீஷ்,​​ இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்,​​ கே.​ முருகவேல் எம்.எல்.ஏ,​​ இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசீய பொதுச் செயலர் கே.எம்.​ காதர் முகைதீன்,​​ தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் டாக்டர் அப்துல் ரகுமான்,​​ இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலர் எம்.எம்.​ இதயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.